கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க வேண்டுமானால் ரொக்கப் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க வேண்டுமானால் ரொக்கப் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல் | கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க வேண்டுமானால், பொதுமக்கள் ரொக்கப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அகில இந்திய வானொலியில் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற மாதாந்திர நிகழ்ச்சியில் மோடி நேற்று பேசியதாவது: பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் முன் எப்போதும் இல்லாத வகையில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. எனினும், கறுப்புப் பணம், ஊழலை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க வேண்டுமானால் ரொக்கத்தைப் பயன் படுத்தாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். ஆனால் இது உடனடியாக சாத்தியமில்லை. எனவே, முதலில் ரொக்கப் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு படிப்படியாக மின்னணு பணப் பரிமாற்ற முறைக்கு மாற வேண்டும் அதாவது தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ரொக்கமாக எடுக்கா மல், பல்வேறு வழிகள் மூலம் எப்படி செலவிடுவது என தெரிந்து கொள்ளுங் கள். பல்வேறு வங்கிகளின் செயலி களை செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டோ அல்லது இணைய தளம் மூலமோ பணப் பரிமாற்றம் செய்வது எப்படி என கற்றுக் கொள்ளுங்கள். இதுதவிர, டெபிட் மற்றும் கிரடிட் கார்டு மற்றும் இதர மின்னணு பணப் பரிமாற்ற வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். வர்த்தகம் அல்லது தொழில் செய்பவர்களும் ரொக்கம் இல்லா பணப் பரிவர்த்தனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது ஆகும். நம் நாடு மின்னணு பொருளா தாரத்தை நோக்கி நகர நீங்கள் வழி காட்டியாக பங்காற்றலாம். உங்க ளுடைய தந்தையோ தாயோ ஏன் மூத்த சகோதரரோ கூட இதுபற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது, பொருட்களை வாங்குவது பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். எனவே, அவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுங்கள். கடும் நடவடிக்கை கறுப்புப் பணம் வைத்திருக்கும் சிலர் ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் அதை டெபாசிட் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை வருமான வரித் துறை கண்காணித்து வருகிறது. சட்டத்தை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த விஷயத்தில் ஏழைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கறுப்புப் பணம் வைத்திருப்போர் ஏழைகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என எச்சரிக்கிறேன். நம் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்த வீரர்களின் வலிமை 125 கோடி மடங்காக அதிகரிக்கும். காஷ்மீரில் அமைதி ஜம்மு காஷ்மீர் கிராம பஞ்சாயத்து தலைவர்களை சமீபத்தில் சந்தித்துப் பேசினேன். போராட்டத்தைக் கைவிடு மாறும் மாணவர்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துமாறும் வேண்டு கோள் விடுத்திருந்தேன். இதை ஏற்றுக் கொண்டதால் இப்போது அங்கு அமைதி திரும்பி உள்ளது.Comments