செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்

செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம் | செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 100 ரூபாய் புழக்கம் அதிகரிப்பு செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்று டெல்லி மேல்-சபையில் நேற்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறி இருப்பதாவது:- செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. ரிசர்வ் வங்கியிடமும், வங்கிகளிடமும் போதிய பணம் கையிருப்பில் உள்ளது. 100 ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில், ரூ.100 மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய நோட்டுகளை வினியோகிக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். .டி.எம்.களில் பாதுகாப்பு மற்றொரு மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ் குமார் கேங்வார் அளித்த பதிலில் கூறியதாவது:- வங்கி கிளைகளிலும், .டி.எம்.களிலும் கொள்ளை முயற்சியை தடுக்க, அங்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. .டி.எம்.களில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல், பயிற்சி பெற்ற காவலாளிகளை அங்கு பணி அமர்த்துதல் ஆகியவை இவற்றில் அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.Comments