ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததற்கு கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதே நோக்கம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததற்கு கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதே நோக்கம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் | 70 ஆண்டுகளாக பதுக்கப்பட்டு வரும் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காகவே ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியது. மத்திய அரசு பதில் மனு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதை ஏற்று, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசு கூறி இருப்பதாவது:- கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக, ஏற்கனவே சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தோம். பினாமி சட்டத்தில் திருத்தம் செய்தோம். அதன் தொடர்ச்சியாக, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. 70 ஆண்டுகளாக பதுக்கல் ரொக்க பரிவர்த்தனையை குறைக்கும் நடவடிக்கையாக இது செயல்படுத்தப்பட்டது. 70 ஆண்டுகளாக கருப்பு பணம் குவிக்கப்பட்டு வருகிறது. அதை வெளிக்கொணரும் முயற்சியாகவே இம்முடிவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான கள்ள நோட்டுகள் வீணாகிப் போய்விட்டன. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி தடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சிரமம் இந்த முடிவு காரணமாக, பொதுமக்கள் சில அசவுகரியங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மக்கள் மத்தியில் எந்த குழப்பநிலையும் இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அதற்கு தீர்வு காணப்படும். .டி.எம்.களில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில், நிலைமை சீரடையும். இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது. இதையடுத்து, செல்லாத நோட்டு அறிவிப்புக்கு எதிரான மனுக்கள் மீது, டிசம்பர் 2-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது.Comments