-->

Friday, November 25, 2016

தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் குரங்கை சித்ரவதை செய்து கொன்ற 4 மாணவர்கள் இடைநீக்கம்

தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் குரங்கை சித்ரவதை செய்து கொன்ற 4 மாணவர்கள் இடைநீக்கம் | குரங்கை கட்டிவைத்து சித்ரவதை செய்து கொன்றதாக வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குரங்கை சித்ரவதை செய்து கொன்றனர் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள விடுதியின் அறைக்குள் கடந்த 19-ந் தேதி பெண் குரங்கு ஒன்று வந்தது. அதனை 4 மாணவர்கள் பிடித்து தொலைபேசி வயரால் கட்டினர். பிறகு குரங்கின் தொடை, கழுத்து, கணுக்காலை உடைத்தும், கத்தியால் குத்தியும் கொன்று புதைத்தனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவ மாணவி ஒருவர், விலங்குகள் நல ஆர்வலர் சிலவன் கிருஷ்ணன் என்பவரின் கவனத்துக்கு கொண்டுசென்றார். இதுகுறித்து பாகாயம் போலீசில் அவர் புகார் அளித்தார். இதையடுத்து கல்லூரி வளாகத்தில் புதைக்கப்பட்ட குரங்கின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 4 மாணவர்கள் இடைநீக்கம் அதில் குரங்கு சித்ரவதை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து மாணவர்கள் 4 பேரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. உடனடியாக கல்லூரி வளாகத்தை விட்டு 4 மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'கொடூரமான முறையில் குரங்கை கொலை செய்த மாணவர்கள் 4 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். போலீஸ் விசாரணை குரங்கை கொன்றது தொடர்பாக மருத்துவ மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனும் நேற்று குரங்கு கொன்று புதைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கடந்த சில மாதங்களுக்குமுன்பு சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து நாய் ஒன்றை தூக்கி கீழே வீசினர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளியே வந்த அவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. இதேபோல் வேலூரில் குரங்கு கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.