-->

Tuesday, November 29, 2016

தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் | தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 48 மணி நேரம் தமிழகத்தில் டிசம்பர் முதல் தேதியிலிருந்து 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- நேற்று காலை தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுபெற்று வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கடலோர திசைகளில் நகரக்கூடும். அதனால் டிசம்பர் 1-ந்தேதியிலிருந்து 4 நாட்கள் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும், கடலோர பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 71 சதவீத மழை குறைவு தமிழகத்தில் கடந்த அக் டோபர் 1-ந்தேதி முதல் இன்று(நேற்று) வரை இயல்பை விட 71 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. துவக்க நிலையில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் 3-ந்தேதி வரை நீடித்தது. 'கியாந்த் புயல்' உருவானதால் வலுவான தென் காற்று நீடித்தது. இதன் காரணமாக வட கிழக்கு பருவமழை பெய்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. நமது தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 32 செ.மீ. அளவு மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 10 செ.மீ அளவு தான் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகமான குளிர் வீசுவதற்கு காரணம் வட மாநிலங்களில் இப்போது குளிர் காலம் அங்குள்ள குளிர் காற்று தெற்கு நோக்கி நகர்ந்ததால் இப்போது அதிகமாகவே குளிர் வீசுகிறது. இதனால் பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.