-->

Monday, November 7, 2016

சமீபத்திய நிகழ்வுகள் குறித்து குரூப்-4 தேர்வில் அதிக வினாக்கள்

சமீபத்திய நிகழ்வுகள் குறித்து குரூப்-4 தேர்வில் அதிக வினாக்கள்
சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பார்வையிடுகிறார் டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி. உடன் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இளநிலை உதவியாளர், தட்டச்சர். சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. இதில் பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய 2 பகுதிகளில் இருந்து தலா 100 கேள்விகள் வீதம் 200 வினாக்கள் கேட்கப்பட்டன. பொது அறிவு பகுதியில் நடப்பு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. 18 கேள்விகள் எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செப்டம்பரில் பொறுப்பேற்றார்? ரியோ ஒலிம் பிக் அரையிறுதிப் போட்டியில் பி.வி.சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையை தோற்கடித்தார்? என்பது போன்ற சமீபத்திய நிகழ்வுகளில் இருந்து 18 கேள்விகள் இடம்பெற்றி ருந்தன. மகாராஷ்டிர ஆளுநரான வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராக கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பேற்றார். அதேபோல கடந்த ஆகஸ்ட்டில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பாட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை நோசோமி ஓகுராவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் பொது அறிவு பகுதியில், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகள்தான் கேட்கப்படும். சமீபகால நிகழ்வுகள் குறித்து கேட்கப்படுவதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு தேர்வர்கள் மத்தியில் நிலவு கிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் நடந்த நிகழ்வுகள் குறித்தும் நேற்றைய குரூப்-4 தேர்வில் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. பொதுத்தமிழ் பகுதியில் கேள்விகள் மிக எளிதாக இருந்ததாக பெரும்பாலான தேர் வர்கள் மகிழ்ச்சியுடன் தெரி வித்தனர். ஓரிரு நாளில் 'கீ ஆன்சர்' ஒவ்வொரு போட்டித்தேர்வு முடிந்ததும் அதற்கான சரியான விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். நேர்காணல் கிடையாது தேர்வில் தங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பதை தேர்வர்கள் கணிப்பதற்கு இது உதவியாக இருக்கும். அந்த வகையில், நேற்று நடந்து முடிந்துள்ள குரூப்-4 தேர்வுக்கான 'கீ ஆன்சர்' ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறினர். குரூப்-4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எனவே, எழுத்து தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி என்பது குறிப்பிடத் தக்கது.   




No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.