எச்.வசந்தகுமார் எழுதிய ‘வெற்றிப்படிக்கட்டு’ 3-ம் பாகம் புத்தகம் சென்னையில் இன்று மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்

எச்.வசந்தகுமார் எழுதிய 'வெற்றிப்படிக்கட்டு' 3-ம் பாகம் புத்தகம் சென்னையில் இன்று மு..ஸ்டாலின் வெளியிடுகிறார் | தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், வசந்த் அன்கோ நிறுவனத்தின் உரிமையாளருமான எச்.வசந்தகுமார், வசந்த் தொலைக்காட்சியில் ஆற்றிய சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு, 'வெற்றிப்படிக்கட்டு' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தின் 3-ம் பாகம் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்குகிறார். புத்தகத்தின் முதல் பிரதியை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.. பொருளாளருமான மு..ஸ்டாலின் வெளியிடுகிறார். அதை, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி பெற்றுக்கொள்கிறார். புத்தகத்தை பார்வையாளர்கள் மத்தியில் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் அறிமுகம் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, .வி.கே.எஸ்.இளங்கோவன், எம்.கிருஷ்ணசாமி, சுதர்சனநாச்சியப்பன் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.Comments