-->

Friday, November 4, 2016

சில குறிப்பிட்ட ஸ்மார்ட் போன்களில் ‘வாட்ஸ்அப்’ சேவை கிடைக்காது டிசம்பர் 31-ந்தேதிக்கு பிறகு துண்டிப்பு

சில குறிப்பிட்ட ஸ்மார்ட் போன்களில் 'வாட்ஸ்அப்' சேவை கிடைக்காது டிசம்பர் 31-ந்தேதிக்கு பிறகு துண்டிப்பு
சிம்பியான் இயங்கு செயலிகளை (ஆபரேட்டிங் சிஸ்டம்) கொண்ட குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் சிலவகை ஸ்மார்ட் போன்களுக்கு டிசம்பர் 31-ந்தேதிக்கு பிறகு 'வாட்ஸ்அப்' சேவை கிடைக்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கியா எஸ்60, ஆண்ட்ராய்டு வெர்சன் 2.1 மற்றும் 2.2, விண்டோஸ் போன் 7.1, ஆப்பிள் ஐபோன் 3ஜிஎஸ், ஐபோன் ஐஓஎஸ் 6 ஆகிய போன்களில் 'வாட்ஸ்அப்' சேவை துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எதிர்கால சேவை மாற்றங்களுக்கு ஏற்ற தொழில்நுட்ப வசதிகள், இந்தவகை போன்களில் இல்லை. எனவேதான் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி உள்ளது.எனவே, வாட்ஸ்அப் மூலம் மற்றவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், டிசம்பர் 31-ந்தேதிக்குள் வேறு போனுக்கு மாறி விடுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.