-->

Sunday, November 6, 2016

தமிழகத்தில் 301 மையங்களில் 5,451 காலியிடங்களுக்கு 15 லட்சம் பேர் எழுதும் குரூப்-4 தேர்வு இன்று நடக்கிறது .

தமிழகத்தில் 301 மையங்களில் 5,451 காலியிடங்களுக்கு 15 லட்சம் பேர் எழுதும் குரூப்-4 தேர்வு இன்று நடக்கிறது .
தமிழகம் முழுவதும் 301 மையங் களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு இன்று நடக்கிறது. மொத்தம் 5,451 காலியிடங்களுக்கு 15 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு இன்று நடக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் இத்தேர்வை, தமிழகம் முழுவதும் 301 மையங்களில் 15 லட்சம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர். குரூப்-4 தேர்வுக்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்றபோதிலும், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும் பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பொறியியல் பட்டதாரிகளும் அடங்குவர். குரூப்-4 தேர்வுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே உண்டு. நேர்முகத் தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே அரசுப் பணி உறுதி. எழுத்து தேர்வு இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். விண்ணப்ப தாரர்கள் ஹால் டிக்கெட்டை தவறாமல் எடுத்துவர வேண்டும். தேர்வுக்கூடத்துக்குள் நுழையும் போதும், அறைக் கண்காணிப் பாளர் கேட்கும்போதும் அதை காண்பிக்க வேண்டும். ஹால் டிக்கெட்டுடன் வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்கூட வளாகத் துக்குள் அனுமதிக்கப்படுவர். உடன் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களையும் தேர்வுக் கூடத்துக்குள் விண்ணப்பதாரர்கள் எடுத்து வரவோ, வைத்திருக்கவோ அனுமதி இல்லை. இதை மீறி தேர்வுக்கூடத்தில் இவற்றை யாராவது வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மையம், தேர்வுக்கூடம், ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விருப்பப் பாடம் ஆகியவற்றை மாற்றிக்கொள்ள அனுமதி யில்லை. தேர்வாணைய அறிவுரை களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்து ள்ளது.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.