சாலையோரத்தில் வீசப்பட்ட காலாவதியான சாக்லெட் சாப்பிட்ட 250 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் கூத்தக்குடியில் கிடந்த காலாவதியான சாக்லெட்டுகளை படத்தில் காணலாம்.

சாலையோரத்தில் வீசப்பட்ட காலாவதியான சாக்லெட் சாப்பிட்ட 250 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் கூத்தக்குடியில் கிடந்த காலாவதியான சாக்லெட்டுகளை படத்தில் காணலாம். | சாலையோரத்தில் வீசப்பட்ட காலாவதியான சாக்லெட்டுகளை சாப்பிட்ட 250 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சாக்லெட் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இரு பள்ளிகளிலும் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த 2 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் நேற்று காலை தங்களது வீடுகளில் இருந்து கூத்தக்குடி ரெயில்வே கேட் வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையோரத்தில் 10 பெட்டிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாக்லெட்கள் கிடந்துள்ளன. இதை எடுத்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர். மேலும் சிறிது சாக்லெட்டுகளை கையில் எடுத்து கொண்டு அந்தந்த பள்ளிக்கு சென்றனர். இதை அறிந்த மற்ற மாணவ-மாணவிகளும் விரைந்து சென்று அங்கு கிடந்த சாக்லெட்டுகளை எடுத்து சாப்பிட்டனர். வாந்தி, மயக்கம் பின்னர் அவர்கள் வகுப்பறைகளுக்கு சென்று பாடங் களை கவனிக்க தொடங்கினர். அப்போது சாக்லெட் சாப்பிட்ட 250 மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டது. ஆசிரியர்கள் விசாரித்தபோது சாலையோரத்தில் கிடந்த சாக்லெட்டுகளை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக மாணவர்கள் கூறினர். சாக்லெட்டுகளை பார்த்தபோது, அவை அனைத்தும் காலாவதியானவை என்பது தெரிந்தது. இதையடுத்து மாணவ, மாணவிகள் அங்குள்ள சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அங்கு இடவசதி இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளியிலேயே மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காலாவதியான சாக்லெட்டுகளை வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசாரும், அதிகாரிகளும் விசாரித்து வருகிறார்கள். தண்டோரா மூலம் அறிவிப்பு இதனிடையே சாலையோரத்தில் வீசப்பட்ட காலாவதியான சாக்லெட்டை பெட்டியுடன், அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் தங்களுடைய வீடுகளுக்கு எடுத்துச் சென்றது அதிகாரிகளுக்கு தெரிந்தது. சாக்லெட்டை எடுத்துச்சென்றவர்கள், அதனை சாப்பிடும் பட்சத்தில் அவர்களுக்கும் உடல் நிலை பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் அதிகாரிகள், கூத்தக்குடி கிராமத்தில் ஊராட்சி பணியாளர்கள் மூலம் தண்டோரா போட்டு, சாலையோரத்தில் கிடந்த சாக்லெட்டை யாரும் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.Comments