டிசம்பர் 2 வரை சுங்கக் கட்டணம் ரத்து டிச. 3 முதல் 15 வரை பழைய ரூ.500 நோட்டுகளை செலுத்தலாம்

டிசம்பர் 2 வரை சுங்கக் கட்டணம் ரத்து டிச. 3 முதல் 15 வரை பழைய ரூ.500 நோட்டுகளை செலுத்தலாம் | நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவிவித்தார். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். சில்லறை தட்டுப்பாடு காரணமாக, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 11-ம் தேதி வரை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தச் சலுகை 24-ம் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது. சில்லறை தட்டுப்பாடு இன்னும் சீரடையாததால், கட்டண ரத்து சலுகை டிசம்பர் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்ட அறிவிப்பில், 'அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் மக்கள் பிரச்சினை இன்றி பயணம் செய்யும் வகையில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. இதேபோல, சுங்கச் சாவடிகளின் அருகில் உள்ள வாகன நிறுத்தங்களிலும் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான இழப்பை மத்திய அரசே ஏற்கும். டிசம்பர் 3 முதல் 15-ம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் பழைய ரூ.500 நோட்டை கொடுத்து கட்டணம் செலுத்தலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.Comments