பணத் தட்டுப்பாடு பிரச்சினை தீராவிட்டால் டிச.1-க்கு பிறகு நிலைமை மோசமாகும் நுகர்வோர் அமைப்பு, வங்கி ஊழியர் சங்கம் கருத்து

பணத் தட்டுப்பாடு பிரச்சினை தீராவிட்டால் டிச.1-க்கு பிறகு நிலைமை மோசமாகும் நுகர்வோர் அமைப்பு, வங்கி ஊழியர் சங்கம் கருத்து | பணத் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகும் என்று நுகர்வோர் அமைப்பினரும் வங்கி ஊழியர் சங்கமும் கருத்து தெரிவித் துள்ளன. 1-ம் தேதிக்கு பிறகு இப்பிரச் சினை மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர் முகுந்தன் கூறும்போது, ''கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும் நடைமுறையில் இது பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களுக்கு அவர்களுடைய மாத ஊதியம் பெரும்பாலும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டாலும் அதை ரொக்கமாக எடுத்து தங்களு டைய வீட்டு வாடகை, பால், காஸ், மளிகை மற்றும் ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் அறிவிப்பு வெளி யான நாளில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், பணத்தை எடுக்கவும் தினமும் மணிக்கணக்கில் வங்கி, ஏடிஎம் முன்பு நிற்கின்றனர். இந்நிலையில், டிசம்பர் 1-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் மேற்கண்ட தேவைகளுக்கு பொதுமக் களுக்கு பணம் ரொக்கமாகத்தான் தேவைப்படும். அதனால் அனைவரும் ஒரே நேரத்தில் வங்கி முன்பு திரள்வர். அப்போதும் இதே நிலை நீடித்தால் இப்பிரச்சினை மேலும் விஸ்வரூபமாக மாறும்'' என்றார். தமிழ்நாடு முற்போக்கு நுகர் வோர் அமைப்பின் தலைவர் சடகோபன் கூறும்போது, ''ஒருவர் வாரத்துக்கு அதிகபட்சமாக 24 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியது. ஆனால், வங்கி களில் நிலவும் பணத் தட்டுப் பாட்டால் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம்தான் கிடைக்கிறது. மாத தொடக்கத்தில் தங்களுடைய அத்தி யாவசிய தேவைகளை எவ்வாறு சமாளிப்பார்கள் என தெரிய வில்லை. எனவே, ரிசர்வ் வங்கி 100, 500 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் அச்சடித்து வெளியிட் டால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்'' என்றார். இந்திய வங்கி ஊழியர் சம் மேளனத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறும்போது, ''ஏற்கெனவே போதிய பணம் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். 1-ம் தேதிக்குப் பிறகும் இதே நிலை நீடித்தால் அத்தியாவசிய தேவைகளுக்கு போதிய பணம் கிடைக்காமல் போகும். இதனால் நிலைமை இன்னும் மோசமாகும். அதற்குள் ரிசர்வ் வங்கி போதிய அளவு 100, 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு வழங்க வேண்டும். இல்லையெனில் சமூகப் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது'' என்றார்.Comments