-->

Thursday, November 3, 2016

அரசு பள்ளிக்கூடத்தில் கழிவறை கட்ட ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவு

அரசு பள்ளிக்கூடத்தில் கழிவறை கட்ட ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவு
அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கழிவறை கட்டுவதற்காக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று காலதாமதமாக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.காஞ்சீபுரத்தில் உள்ள நாகரீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான வீட்டில் சிலர் வாடகைக்கு குடியிருக்கின்றனர். அவர்களை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை முன்சீப் கோர்ட்டில், கோவில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில், முன்சீப் கோர்ட்டு கடந்த 2008-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து, வாடகைதாரர்கள் இருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை மிகவும் காலதாமதமாக தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுவை காலதாமதமாக தாக்கல் செய்ததற்கு வழக்கு செலவு விதித்தால் அதை ஏற்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.அதற்கு நீதிபதி, 'தமிழகத்தில் பல பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு முறையான கழிவறை வசதிகள் கூட இல்லை. வழக்கு செலவாக விதிக்கப்படும் தொகையை மனுதாரர்கள் ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்துக்கு நன்கொடை வழங்கினால் என்ன?' என்று மனிதாபிமானத்துடன் மனுதாரர்கள் தரப்பு வக்கீலிடம் கேட்டார். அதற்கு அந்த வக்கீல், தன் கட்சிக்காரர்களிடம் கருத்து கேட்டு, பள்ளிக்கூடத்துக்கு நன்கொடை செலுத்த தயார் என்று பதிலளித்தார்.இதையடுத்து, 'சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மனுதாரர்கள் ரூ.10 ஆயிரத்தை 2 வாரத்துக்குள் வழங்கவேண்டும். இந்த தொகையை கொண்டு, மாணவர்களுக்கு சுத்தமான கழிவறையை தலைமை ஆசிரியர் கட்டவேண்டும்' என்று நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவு பிறப்பித்தார்.மேலும், அந்த உத்தரவில், மனுதாரர்களின் மனுவை தள்ளுபடி செய்து காஞ்சீபுரம் முதன்மை முன்சீப் கோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், மனுதாரர்களின் மனுவை மீண்டும் விசாரித்து 3 வாரத்துக்குள் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.அதேபோல, சொத்து விற்பனை தொடர்பான மற்றொரு சிவில் வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுதாரரும் காலதாமதமாக வழக்கு தொடர்ந்ததற்கு வழக்கு செலவு செலுத்தவும், அந்த தொகையை ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்துக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.இதையடுத்து அய்யப்பன்தாங்கலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும்படி அந்த மனுதாரருக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டார். இந்த தொகையையும் கழிவறை கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ளும்படி பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.