ஆகஸ்டு இறுதி நிலவரப்படி, செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 103 கோடி தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தகவல்

ஆகஸ்டு இறுதி நிலவரப்படி, செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 103 கோடி தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தகவல் | ஆகஸ்டு இறுதி நிலவரப்படி, இந்தியாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 103 கோடி என இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. டிராய் புள்ளிவிவரங்கள் டிராய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:- ஜூலை மாதத்தின் இறுதியில், செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 103.42 கோடியாக இருந்தது
ஆகஸ்டு மாதத்தில் இது 103 கோடியாக குறைந்துள்ளது. ஆக, செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 0.42 சதவீதம் குறைந்துள்ளது. இதே மாதங்களில், நகர்புறங்களில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 0.63 சதவீதம் குறைந்து 58.59 கோடியாக உள்ளது. கணக்கீட்டுக் காலத்தில், வருவாய் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 25.03 சதவீத சந்தைப்பங்குடன் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து வோடாபோன் நிறுவனம் 19.46 சதவீத பங்குடன் இரண்டாவது இடத்திலும், 17.19 சதவீத பங்குடன் ஐடியா செல்லுலார் நிறுவனம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பொதுத்துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். 8.98 சதவீத பங்குடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. எம்.டி.என்.எல். 0.25 சதவீத பங்குடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆகஸ்டு மாதத்தில் பீ.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 18.40 லட்சம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் மொத்த செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 9.20 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் நான்காவது இடத்தில் இருக்கிறது. லேண்டுலைன் ஆகஸ்டு இறுதி நிலவரப்படி, லேண்டுலைன் இணைப்புகளின் எண்ணிக்கை 2.45 கோடியாக குறைந்துள்ளது. ஜூலை இறுதியில் அது 2.46 கோடியாக இருந்தது. இப்பிரிவில் பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களின் மொத்த சந்தைப்பங்கு 70.94 சதவீதமாக உள்ளது. மொத்த லேண்டுலைன் இணைப்புகளில் நகரங்களின் பங்கு 83.91 சதவீதமாகவும், கிராமங்களின் பங்கு 16.09 சதவீதமாகவும் உள்ளது. ஆகஸ்டு மாதத்தில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 3 சதவீதம் வளர்ச்சி கண்டு (16.70 கோடியில் இருந்து) 17.17 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த சேவையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 4.34 கோடி இணைப்புகளை வழங்கி முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. 98.40 லட்சம் இணைப்புகளுடன் பீ.எஸ்.என்.எல். நான்காவது இடத்தில் இருக்கிறது. மொத்த இணைப்புகள் ஜூலை இறுதி நிலவரப்படி, ஒட்டுமொத்த தொலைபேசி இணைப்புகளின் (லேண்டு லைன்+செல்போன்) எண்ணிக்கை 105.89 கோடியாக இருந்தது. ஆகஸ்டு மாதத்தில் இது 0.52 சதவீதம் குறைந்து 105.34 கோடியாக உள்ளது. இவ்வாறு டிராய் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.Comments