-->

Monday, October 10, 2016

உலக கோப்பை கபடி போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அணி வெற்றி

உலக கோப்பை கபடி போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அணி வெற்றி
அகமதாபாத்: உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 54-20 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. ஆண்களுக்கான 3-வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. வருகிற 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்காளதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் கொரியா, அர்ஜென்டினா ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஈரான், அமெரிக்கா, போலந்து, கென்யா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தென் கொரியாவிடம் 32-34 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தோல்வியுற்றது. இந்நிலையில் இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. பரபரப்பான இப்போட்டியில் இந்திய அணி 54-20 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியில் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.