-->

Thursday, October 6, 2016

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் கீழாநெல்லி

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் கீழாநெல்லி
ஈரலுக்கு பலம் கொடுக்க கூடியதும், மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் தன்மை உடையதும், புண்களை ஆற்றக் கூடியதுமான கீழாநெல்லியின் நன்மைகள்  குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கீழாநெல்லி கசப்பு, துவர்ப்பு சுவை உடையது. கீழாநெல்லியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, பனங்கற்கண்டு. கீழாநெல்லி இலை, வேர்  ஆகியவற்றை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை, மாலை இருவேளை காய்ச்சல் இருக்கும்போது 50 முதல் 100 மில்லி குடித்துவர  காய்ச்சல் குறையும். இளஞ்சூடாக இந்த தேனீர் குடிக்கவும். கீழாநெல்லி அற்புதமான காய்ச்சல் போக்கியாக விளங்குகிறது. இது, வியர்வையை தூண்டக் கூடியது.  உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. ஈரல் சரியாக செயல்படாதபோது, பித்தம் அதிகமாகி உடலுக்கு உஷ்ணம் உண்டாகும். ஈரல் சரியாக வேலை செய்யாதபோது  ஏற்படும் காமாலையால் வரும் காய்ச்சலை கீழாநெல்லி குணமாக்குகிறது. குளிர் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றுக்கு மருந்தாக  விளங்குகிறது.கீழாநெல்லியை கொண்டு மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, மோர். கீழாநெல்லி இலைகளை  சுத்தப்படுத்தி பசையாக்கவும். இதை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து உப்பு சேர்க்காத மோருடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.  இதை எடுக்கும்போது எண்ணெய் சேர்க்க கூடாது. உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. கீழாநெல்லி காய்ச்சலை போக்குவதுடன், ஈரலுக்கு பலம்  கொடுக்க கூடியதாக உள்ளது. இதை பயன்படுத்துவதால்  மஞ்சள் காமாலை வெகு விரைவில் விலகும். ஈரல் வீக்கம் வராமல் தடுக்கும் மருந்தாகிறது. தோல் வியாதி, புண்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கீழாநெல்லி இலை பசையில் இருந்து சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து  சிரங்கு பிரச்னை இருப்பவர்கள் இதை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் சிரங்கு குணமாகும். கீழாநெல்லி சாறு பூசுவதால் தோல் நோய்கள் சரியாகும். இதுஎதிர்ப்பு சக்தி உடையது. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யுடன் கீழாநெல்லி இலைப் பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை மேல்பூச்சாக  பயன்படுத்துவதன் மூலம் வெட்டுக்காயங்கள் சரியாகும். புண்கள் விரைவில் ஆறும். கீழாநெல்லியை நசுக்கி வெட்டு காயங்கள் மீது வைத்து கட்டி வைத்தால் காயம் குணமாகும். கால்களில் நரம்பு சுற்றிக்கொண்டிருப்பதால் ஏற்படும் புண்கள்  சரியாகும். சர்க்கரை நோயினால் உண்டாகும் கட்டி, புண்கள் குணமாகும். புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் முடி வளர்வதற்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம்.  புழுவெட்டு என்பது தலையில் முடிகொட்டி, திட்டுதிட்டாக வழுக்கை ஏற்படும். இது ஒருவித கிருமிகளால் ஏற்படுகிறது. மாதுளையின் சாறு எடுத்து புழுவெட்டு  உள்ள இடத்தில் சற்று அழுத்தி தேய்த்து வருவதால் இப்பிரச்னை சரியாகி முடிவளரும். புழுவெட்டு உள்ள இடத்தில் மாதுளை சாறு தேய்து தலைக்கு குளித்து  வருவது நல்லது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.