-->

Sunday, October 9, 2016

பயணங்களில் நல்வழியாய் உதவும் நேவிகேட்டர் மேப் வசதி

பயணங்களில் நல்வழியாய் உதவும் நேவிகேட்டர் மேப் வசதி
உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் நாம் வழி தெரியாமல் தவிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் ஸ்மார்ட் போன்களில் நமக்கு வழிகாட்டக்கூடிய 'நேவிகேட்டர்' வசதி மற்றும் மேப் வசதிகள் உள்ளன. இதன் காரணமாய் நாம் செல்லும் இடத்திற்கான வழியை ஒவ்வொரு சாலை, தெரு, முதற்கொண்டு அந்த இடத்திற்கே செல்வதற்கான வழியை காட்சியாக தெளிவு படுத்தி விடும். உலகளவில் ஒவ்வொரு நாட்டிற்கு என தனிப்பட்ட நேவிகேட்டர் வசதியும், உலகளாவிய நேவிகேட்டர் வசதியும், ஸ்மார்ட் போன்களில் கிடைக்கின்றது. இந்த மேப் வசதி மூலம் தற்போது புதியதாக ஓர் நகரத்திற்கோ, வேறு மாநிலத்திற்கோ செல்ல வேண்டியிருந்தால் யாரும் துணைக்கு வேண்டும் என்றோ, வழியை கேட்டறிய அந்த மாநில மொழியை பேச வேண்டும் என்ற அவசியமில்லை.
இந்தியாவில் தனிப்பட்ட மேப் வசதியை மேம்படுத்த தனியாக மேம்பட்ட செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மேப் வசதி மூலம் நமக்கு தெரியாத தொழில் நிறுவனம், கடைகள் போன்றவற்றிற்கு செல்வதற்கான வழியை கூட தனிப்பட்டவாறு அறிந்து கொள்ளலாம். நவீன வசதிகளில் மேம்பட்ட மேப் வசதியை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மாறுபட்ட வகையில் தருகின்றன.
சுற்றுலா தலங்கள் முதல் சிறிய கடை வரை அறிய வசதியான கூகுள்மேப்
கூகுளின் மேப் வசதி மூலம் ஒவ்வொரு நகரின் அனைத்து சாலைகளும், புகழ்பெற்ற நிறுவனங்கள், கடைகள், சுற்றுலா தலங்கள், மருத்துவமனைகள், அழகு நிலையங்கள் போன்ற அனைத்தும் அதன் பெயருடன் போக வேண்டிய தூரம், எவ்வளவு நேரம் பிடிக்கும், மாறுபட்ட சாலை வழிகள், சுலபமான வழி எவை என்பவை முதற்கொண்டு அறிய முடியும்.
நாம் பேருந்தில் செல்லும் போது கூட நாம் அறியாத இடங்களில் அந்தந்த பேருந்து நிலையம் வந்து விட்டதா எனவும் பேருந்து நகரும் போக்கிலேயே நகர்ந்து சாலையில் மேப் பயணிக்கும்.
அறியாத நபர்களுடன் செல்லும் போதும், ஆட்டோ மற்றும் டாக்சி, கார்களில் பயணிக்கும் போதும் சரியான பாதையில் அழைத்து செல்கின்றனரா என்பதை சோதித்து அறியவும் இந்த நேவிகேட்டர் மற்றும் மேப் வசதிகள் பயன்படுகின்றன.
இருமாறுபட்ட பார்வை காட்சியை வழங்கும் மேப்
மேப் என்பதில் முன்பு கோடுகளாய் வரையப்பட்ட மேப் வசதி தான் இருந்தன. தற்போது சாட்டிலைட் பார்வை என்றவாறு ஒரு பறவை மேலிருந்து பார்த்தால் எப்படி பார்க்க முடியுமோ அதுபோல் காட்சிகள் தத்ரூபமாய் சாலையை நாம் நேரடியாக பார்க்கும் வடிவில் காட்சியை தருகின்றன. இதன் மூலம் நாம் செல்ல நினைக்கும் இடத்தின் இடத்தின் சூழல் முதற்கொண்டு அறிந்து செல்ல முடிகிறது.
இன்டர்நெட் வசதியின் மூலம் செயல்படும் மேப் வசதி
இந்த மேப் மற்றும் நேசிகேட்டர் வசதியை ஸ்மார்ட்போனில் செயல்படுத்த அவசியம் இணையதள சேவை. இணையதள சேவை வசதியின் மூலம் மேப் இயங்குகிறது என்பதுடன் வை-பை வசதி மூலமும் ஸ்மார்ட்போனில் மேப் வசதியை பெறலாம். காரில், டூவீலரில் செல்லும் போது முன் பக்கத்தில் ஸ்மார்ட்போனை வைத்து கொண்டு சாலை வழிகளை கண்டறிந்து செல்லலாம்.
சாலையில் எந்தெந்த பக்கம் திரும்ப வேண்டும் என்பது முதல் சாலையின் வாகன நெரிசல் இருந்தால் வேறு பாதைக்கு வழிகாட்டுதல் வரை அனைத்து பணிகளையும் மேப் வசதி மூலம் பெறமுடியும். இந்த மேப் வசதி மூலம் நமது பயண வழிகள் குறித்த பயமின்றி எந்த ஓர் நகரத்திலும் பயணிக்க முடியும். புதிய நகரங்களுக்கு சென்று ஏதேனும் வழி தவறி வர நேரிட்டால் கூட மேப் வசதி மூலம் சரியான பாதை அறிந்து இணைந்து விடலாம்.
ஏராளமான வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போனில் மேப் வசதி என்பது அனைவருக்கும் ஏற்ற நல்ல பயனுள்ள வசதி என்பதுடன் பயணங்கள் சிறக்க ஏற்ற வசதியாகவும் உள்ளது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.