-->

Friday, October 7, 2016

சந்திரனிலும் நிலநடுக்கம்: சந்திரயான் அனுப்பிய படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தகவல்

சந்திரனிலும் நிலநடுக்கம்: சந்திரயான் அனுப்பிய படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தகவல்
பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போன்று சந்திரனிலும் ஏற்படுள்ளதை, சந்திரயான் விண்கலம் அனுப்பியுள்ள படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் தெரிய வந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் "டெக்டானிக் பிளேட்" என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் உள்ளன. அவை நகர்கிறபோது அவைகளுக்கிடையே உராய்வு ஏற்படுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

பூமியின் துணை கோளாகிய சந்திரனின் மேற்பரப்பிலும் புவி அடுக்குகளைப் போன்றவை உள்ளன. என்றும் அந்த அடுக்குகள் நகர்கிறபோது, அங்கும் நில நடுக்கம் ஏற்படுகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

நாம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பியுள்ள சந்திரயான் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள படங்களை, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளியின் நிலவியல் தொலை உணர்வு பேராசிரியரும், விஞ்ஞானியுமான சவுமித்ரா முகர்ஜியும், அவரது மாணவி பிரியதர்சினி சிங்கும் ஆய்வு செய்து வந்தனர்.

சந்திரயான் விண்கலத்தில், பொருத்தப்பட்டுள்ள குறுகிய கோண கேமராவும், சந்திர வேவு கல கேமராவும் சந்திரனின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியுள்ளன. இந்த படத்தை அவர்கள் ஆய்வு செய்தபோது சந்திரனில் நிலநடுக்கம் ஏற்பட்டதுதெரிய வந்துள்ளது.

இது குறித்து பேராசிரியர் சவுமித்ரா முகர்ஜி கூறியதாவது:

சந்திரனின் தென்துருவத்தில் பெறப்பட்ட தகவல்கள், சந்திரனின் மேற்பரப்பில் அடுக்குகள் நகர்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

இந்த அடுக்குகளின் நகர்தல், பூமியில் புவித்தட்டுகளின் நகர்தல் போலவே அமைந்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் உள்ள அடுக்குகளில் இரண்டாவது அடுக்கு எரிந்துகொண்டிருப்பதால், டெக்டானிக் பிளேட்டுகள் நகர்கின்றன.

இரண்டாவது அடுக்கு எரிந்து கொண்டிருப்பதால், அங்குள்ள பாறைகள், கனிமங்கள், தாதுக்கள் உருகி பாகு போன்ற திரவ நிலையில் உள்ளன. இதேபோன்ற நிலையை சந்திரனின் மேற்பரப்பிலும் காண முடிகிறது.

எனவே, பூமியின் வடிவமைப்பில்தான் சந்திரனும் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டியதாகிறது. அந்த வகையில் பூமியில் ஏற்படுகிற நில நடுக்கத்தையும், சந்திரனில் ஏற்படுகிற நிலநடுக்கத்தையும் ஒப்பிட்டு ஆராய முடியும்.

தற்போது நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க வழி இல்லை. எனவே எதிர்காலத்தில் சந்திரனின் மேற்பரப்பில் ஏற்படுகிற டெக்டானிக் பிளேட்டுகளின் நகர்தல், நிலநடுக்கம் ஆகியவற்றை பூமியில் ஏற்படுகிற நிலநடுக்கத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால், அது பூமியில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதற்கு ஒரு படிநிலையாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.