-->

Saturday, October 8, 2016

சமூக நுட்பம்

சமூக நுட்பம்
மைக்ரோசாப்ட், கடந்த ஜூனில் கையகப்படுத்திய சமூக வலைத்தளமான லிங்க்ட் இன், விரைவில் பல புதிய வசதிகளை கொண்டு வரவுள்ளது. பேஸ்புக் போல ஒரு மாபெரும் நேரக் கொல்லியாக மாறுவதே அதன் நோக்கம். சமீபத்திய போக்குகளைக் காட்டும் 'இன்ட்ரஸ்ட் பீட்' என்ற செய்தி ஓடை, மிகவும் எளிமைப்படுத்திய குறுஞ்செய்தி வசதி, தொடர்புகொள்ளும் நபர்களுக்கு பொதுவான ஆர்வமுள்ள தலைப்புகள் தொடர்பாக இணையத்தில் உள்ள செய்திகளின் இணைப்பை காட்டும் வசதி, நேரில் சந்திக்க விரும்பும் நபர்களுக்கு தோதான இடத்தை காட்டும் வசதி, உறுப்பினர்கள் தங்கள் துறை சார்ந்த புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் வசதி என பல வசதிகளை லிங்க்ட் இன் அறிமுகப்படுத்தவிருக்கிறது.இணைய முகவரிகளை பதிவு செய்யவும், தளங்களை பராமரிக்கவும் உதவும் நிறுவனமான, 'கோ டேடி' சமீபத்தில், 'ப்ளேர்' (Flare) என்ற தொழில்முனைவோருக்கான இணைய சமூக செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது. புதிய தொழில்முனைவோர், அனுபவமுள்ளவர்களிடம் இதில் கலந்துரையாடி, ஆலோசனைகள் பெறலாம்.யூ டியூப் இந்தியாவுக்கென்றே 'யூ டியூப் கோ' என்ற சேவையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இணைய தொடர்பு இல்லாதபோதும் யூ டியூப் காணொளிகளை பார்க்கவும், பிறருடன் பகிரவும் இது உதவும். அதுமட்டுமல்ல, இணைய செலவுகளை குறைக்க விரும்புபவர்களுக்கும் சில வசதிகளை தருகிறது யூ டியூப் கோ. ஒரு வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கு முன் அது எத்தனை, 'எம்பி' சுவையான காட்சிகள் என்னென்ன உள்ளன என்பதை பார்க்கும் வசதிகளை யூ டியூப் கோ தருகிறது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.