-->

Monday, October 31, 2016

இந்த வார வேலைவாய்ப்பு ...உங்களுக்காக ...

இந்த வார வேலைவாய்ப்பு ...உங்களுக்காக ...

விவசாய நலத்துறை:
மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தில் இணை இயக்குனர் (கெமிஸ்ட்ரி) மற்றும் துணை இயக்குனர் (கெமிஸட்ரி) உள்ளிட்ட அதிகாரி பணிகளுக்கு 22 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வேளாண்மை சார்ந்த ஆய்வுப்படிப்புடன் குறிப்பிட்ட பணிஅனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.agricoop.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். அறிவிப்பில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு அக்டோபர் 22-28 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கவும்.

உணவு தொழில்நுட்ப மையம் :
தேசிய உணவு தொழில்நுட்ப மையத்தில் துணை நூலகர், உதவி நூலகர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட கற்பித்தல் சாராத பணிகளுக்கு 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இது பற்றிய முழுமையான விவரங்களை www.niftem.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்கள் 7-11-2016-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ராணுவ டெப்போ :
பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் ராணுவ டெப்போக்களில் ஒன்றான 221 கோய் .எஸ்.சி. ராணுவ டெப்போவில் 'குரூப்-சி' பணிக்கு 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தீயணைப்பு வீரர், மஸ்தூர், சபாய்வாலா போன்ற பணிகள் இதில் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம் அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இது பற்றிய விவரங்களை அக்டோபர் 21-28 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கவும்.

இர்கான்:
இந்திய ரெயில்வே அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் 'சைட் சூப்பிரவைசர்(சிவில்)' பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பை முழு நேரபடிப்பாக படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை 9-11-2016-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு www.ircon.org என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

உருக்காலை :
மேற்கு வங்காள மாநிலம் பர்ன்பூரில் செயல்படும் 'செயில்' உருக்காலை நிறுவனத்தில் டெபுடி மேனேஜர் (ஆபரேசன்ஸ், மெக்கானிக்கல்) பணியிடங் களுக்கு 24 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், புரொடக்சன், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் www.sail.co.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு 4-11-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.