-->

Wednesday, October 19, 2016

ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தகுதியிலான தேர்வு முடிவு நவ.8-ல் வெளியீடு.

ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தகுதியிலான தேர்வு முடிவு நவ.8-ல் வெளியீடு.

பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு தகுதியிலான தேர்வின் முதல் கட்ட ஆன்லைன் தேர்வு (Tier-I) கடந்த ஆகஸ்டு மாதம் 27 முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை நாடு முழுவதும் 96 நகரங்களில் 415 மையங்களில் நடத்தப்பட்டது. 43 தொகுதிகளாக நடத்தப்பட்ட இத்தேர்வை 14 லட்சத்து 99 ஆயிரம் பேர் எழுதினர். இந்த நிலையில், ஆகஸ்டு 27-ம் தேதி அன்று மாலை 4.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற 2-வது தொகுதி தேர்வுக்கு மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் கலந்துகொண்ட தேர்வர்களுக்கு மட்டும் அக்டோபர் 27-ம் தேதி அன்று மறுதேர்வு நடத்தப்படும். இது குறித்த விவரம் சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும். தேர்வு முடிவுகள் உத்தேசமாக நவம்பர் 8-ம் தேதி அன்று வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2-வது கட்ட தேர்வானது (Tier-II) தோராயமாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்




No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.