-->

Monday, September 26, 2016

பேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி

பேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், கல்வி அதிகாரிகளுக்கு, அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் கலந்து கொள்ள லாம். போட்டிகள் கல்வி மாவட்ட அளவில், வருவாய் மாவட்ட அளவில், மாநில அளவில் என 3 நிலைகளில் நடத்தப்படும். பள்ளிகள் அளவிலான போட்டி அந்தந்த பள்ளிகளில் அக்டோபர் 17 முதல் 19-ம் தேதி வரையும், கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் அக்டோபர் 20 முதல் 22-ம் தேதி வரையும், வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் அக்டோபர் 24 முதல் 26-ம் தேதி வரையும் நடைபெறும்.
பேச்சுப் போட்டி 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'மழையும் மனிதனின் நிலையும்' அல்லது 'தீ விபத்தும் முதலுதவியும்' என்ற தலைப்பிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'இயற்கை இடர் களும் பாதுகாப்பும்' அல்லது 'சாலை விபத்துகளும் தவிர்க்கும் முறை களும்' என்ற தலைப்பிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 'பேரிடர் மேலாண்மையில் மாணவர் களின் பங்கு' அல்லது 'ஓசோன் ஓட்டை' என்ற தலைப்பிலும் நடைபெறும்.
அதேபோல் கட்டுரைப் போட்டி யானது 6,7,8-ம் வகுப்பு மாணவர் களுக்கு 'பேரிடர் மேலாண்மையில் பள்ளிகளின் பங்கு' அல்லது 'இடர்கள் இல்லாத இந்தியா' என்ற தலைப்பிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'பேரிடர் மேலாண் மையில் எனது பங்களிப்பு' அல்லது 'பேரழிவுத் தடுப்பில் காடுகள்' என்ற தலைப்பிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 'பேரிடர் மேலாண்மையில் சமூகத்தின் பங்களிப்பு' அல்லது 'பேரிடர் மேலாண்மை-ஒரு சவால்' என்ற தலைப்பிலும் நடைபெறும்.
ஓவியப் போட்டிகள் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'மழை வெள்ளப் பாதுகாப்பு' அல்லது 'சாலை பாதுகாப்பு' என்ற தலைப்பிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'மாசுபடுதலும் விழிப்புணர்வும்' அல்லது 'பள்ளி களில் பாதுகாப்பு' என்ற தலைப்பிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 'பேரிடரில் துளிர்த்த மனிதநேயம்' அல்லது 'இயற்கை பாதுகாப்பு' என்ற தலைப்பிலும் நடத்தப்படும்.
கல்வி மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.250, 2-ம் பரிசு ரூ.150, 3-ம் பரிசு ரூ.100-ம், வருவாய் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.300, 2-ம் பரிசு ரூ.200, 3-ம் பரிசு ரூ.150-ம், மாநில அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.