-->

Tuesday, September 27, 2016

கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க காலக்கெடு!!!

கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க காலக்கெடு!!!
 'தொழிலாளர் நல வாரியம் வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர், அக்., 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு, தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிளஸ் 1 முதல், முதுகலை பட்டம் வரை படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகங்கள் வாங்குவதற்கான நிதியுதவி அளிக்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பட்ட படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.அரசு பொதுத் தேர்வில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிப்பில், மாவட்ட அளவில் முதல், 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, அவர்கள் மேல்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்களை, 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை' என்ற முகவரியில், அக்., 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2432 1542 என்ற எண்ணிலும், www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.