-->

Thursday, September 22, 2016

பலூன்கள் மூலம் இணையவசதி வழங்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

பலூன்கள் மூலம் இணையவசதி வழங்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி
இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில், பலூன்கள் மூலம் இணையவசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இந்த நிறுவனம் இணையத்தின் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

அதன்படி, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்கக்கூடிய கருவிகள் பொருத்தப்பட்டு வானில் பறக்கவிடப்படும்.

தரையிலிருந்து அவற்றின் பாதை கட்டுப்படுத்தப்படும்.  இதன்மூலம், இதுவரை இணையதள வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள்  வசதி பெறமுடியும்.

இந்த திட்டத்திற்கு பிராஜெக்ட் லூன் ( Project Loon ) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரேசில் நாடுகளை தொடர்ந்து கடந்த வாரம் இந்தோனேசியாவில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த திட்டம் இந்தியாவிலும் செயல்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. பலூன் மற்றும் சூரிய மின்சக்தியில் இயங்கும் 8 மிகப் பெரிய ஆளில்லா விமானங்கள் மூலம் இத்திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது.

இந்நிலையில், பலூன் மூலம் இணையவசதியை வழங்கும் இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில்  மட்டும் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக கூகுள் நிறுவனம் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் என்றும், திட்டத்தை செயல்படுத்த ஏற்ற இடங்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.