-->

Tuesday, September 27, 2016

பள்ளி மேலாண்மைக்குழுவின் பொறுப்புகள்

பள்ளி மேலாண்மைக்குழுவின் பொறுப்புகள்
குழந்தைகளுக்கான இலவச கல்வி உரிமை சட்டம் குறித்த தகவல்களின் தொடர்ச்சியை இங்கே காணலாம்.8-ம் வகுப்பு முடியும் வரையில் எந்தவொரு மாணவனையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது. அதாவது அனைவரும் தேர்ச்சியுற வேண்டும். எந்தக் குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது. எந்த ஒரு மாணவனுக்கும், எந்த காரணத்திற்காகவும் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ தண்டனை அளிக்கக் கூடாது.ஒரு குழந்தைக்கு அரசுப் பள்ளிக்கூடங்களில் ஆகும் மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட செலவினத்தொகை அல்லது தனியார் பள்ளிக்கூடங்கள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை இதில் எது குறைவோ அதனை மீளப் பெறலாம். கல்விக்கட்டணத்தை திருப்பி தருவதற்காக ஜூலை மாதத்தில் கல்வி அதிகாரிகளுக்கு மாணவர்கள் பட்டியலை கட்டாயமாக அனுப்பி வைக்க வேண்டும்.ஏதாவது ஒரு குழந்தை 30 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருந்தாலோ அல்லது கல்வி ஆண்டின் இடையில் பள்ளியை விட்டு விலகினாலோ அதை உள்ளூர் கல்வி அதிகாரிகளிடம் தெரியப்படுத்திட வேண்டும்.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதத்தில் 2 தவணை முறைகளில் கல்விக் கட்டணத்திற்கான தொகையை வழங்குவார்கள். திருப்பித் தரப்படும் தொகைக்காக, பள்ளி ஒரு தனி வங்கிக் கணக்கு ஏற்படுத்துதல் வேண்டும்.போன்றவை பள்ளி மேலாண்மைக்குழுவின் பொறுப்புகள் ஆகும்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.