-->

Tuesday, September 27, 2016

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
* வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேர், நேற்று அதிகாலை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது அவர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். கொல்லப்பட்டவர் பெயர் பகருல் இஸ்லாம் என்றும், அவர் கடத்தல்காரர் என்றும், மற்றவர் அவரது கூட்டாளி என்றும் டாக்காவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
* சிரியாவில் உதவிப்பொருட்கள் ஏற்றிச்சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி, 20 பேரை கொன்று குவித்து, போர் குற்றங்கள் செய்திருப்பது ரஷியாதான் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
* ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத் நகரில் உள்ள வணிக வீதி ஒன்றில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், உடலில் குண்டுகளை கட்டி வந்து வெடிக்கச்செய்தார். இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
* ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் நேற்று குண்டுவெடித்தது. இதில் சிக்கி 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.