-->

Wednesday, September 28, 2016

புற்றுநோயைக் கட்டுப்படுத்த புதிய மருந்து

புற்றுநோயைக் கட்டுப்படுத்த புதிய மருந்து
மனிதகுலத்தை அச்சுறுத்தும் நோயாக புற்றுநோய் உள்ளது. எனினும் இந்நோய் அபாயத்தில் இருந்து முழுமையாக விடுவிக்கக்கூடிய எந்த மருத்துவ முறையையும் நவீன மருத்துவ உலகம் கண்டுபிடிக்கவில்லை.
இதுதொடர்பாக நடந்துவரும் ஆராய்ச்சிகளின் விளைவாகத் தற்போது ஒரு புதிய நிவாரண மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.
ஐ.எம்.எம்.-101 என்ற இந்த மருந்தை லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இதுதொடர்பான ஆய்வுக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 110 பேர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதற்கான ஆய்வுக்காலம் ஆரம்பத்தில் 4 மாதங்களாக வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது.
இந்த மருந்து தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகள் நம்பிக்கைதரும் முடிவு களைக் கொடுத்திருக்கும் வேளையில், இது தொடர்பான கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.