-->

Tuesday, September 20, 2016

கடற்படையில் என்ஜினீயர்கள் சேர்ப்பு இரு பாலருக்கும் வாய்ப்பு

கடற்படையில் என்ஜினீயர்கள் சேர்ப்பு இரு பாலருக்கும் வாய்ப்பு
கடற்படையில் பைலட் மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகளை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆண்-பெண் இருபாலருக்கும் பணியிடங்கள் உள்ளன.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான கடற்படை பல்வேறு சிறப்பு நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்களை படைப் பிரிவில் சேர்த்து வருகிறது. தற்போது 'கோர்ஸ் காமென்சிங் ஜூன்-2017' பயிற்சியின் கீழ் பைலட் மற்றும் 'நேவல் அர்மாமென்ட் இன்ஸ்பெக்சன் கேடர் (என்.ஏ.ஐ.சி.)' பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆண்-பெண் இருபாலருக்கும் பணியிடங்கள் உள்ளன.
இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
பைலட் பணிக்கு 19-24 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2-7-1993 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சி.பி.எல். பைலட் லைசென்ஸ் பெற்றவர்கள் 25 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 2-7-1992 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
என்.ஏ.ஐ.சி. பிரிவில் சேருபவர்கள் 19½ வயது முதல் 25 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1992 மற்றும் 1-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இவர்கள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
பி.இ., பி.டெக் படித்தவர்கள் பைலட் பயிற்சியில் சேரலாம்.
பி.இ., பி.டெக் படிப்புகளில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இயற்பியல் பிரிவுகளில் படித்தவர்கள் என்.ஏ.ஐ.சி. பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
உடல் தகுதி:
பைலட் பணி விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 162.5 செ.மீ உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும், பார்வைத்திறன் சரியான நிலையில் 6/6, 6/6 என்ற அளவுக்குள்ளும், பாதிக்கப்பட்டிருந்தால் 6/6, 6/9 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.
என்.ஏ.ஐ.சி. பணி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், பெண்கள், 152 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். பார்வைத்திறன் சரியான நிலையில் 6/6, 6/12 என்ற அளவுக்குள்ளும், தூரப் பார்வையில் 6/60, 6/60 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் பாதிப்பு இருக்கக்கூடாது.
தேர்வு செய்யும் முறை:
சர்வீசஸ் செலக்சன் போர்டு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 ஆகிய இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். நுண்ணறிவுத்திறன், படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடல், உளவியல் திறன், குழுத் தேர்வு, நேர்காணல், உடற்திறன், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகளுக்கு உட் படுத்தி தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் உதவி லெப்டினன்ட் தரத்திலான அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். கமாண்டர் பதவி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 30-9-2016 வரை இணையதளத்தில் செயல்பாட்டில் இருக்கும். முன்னதாக புகைப்படத்தை 25 கே.பி. அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு நகலுடன் தேவையான சான்றுகள் சுயசான்றொப்பம் செய்து இணைத்து Post Box No.02, Sarojini Nagar PO, New Delhi 110023 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பயிற்சியின் பெயர், படிப்பு, மதிப்பெண் சதவீதம், என்.சி.சி. சான்றிதழ் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.
முக்கிய தேதி:
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 30-9-2016
விரிவான விவரங்களை அறிய www.joinindiannavygov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.