-->

Tuesday, September 27, 2016

என்ஜினீயர்களுக்கு வேலை

என்ஜினீயர்களுக்கு வேலை
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிலையத்தில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு 161 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். புரொடக்சன் பிரிவில் 116 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 28 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 16 இடங்களும், இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் 1 இடமும் உள்ளது.
பணியிடங்கள் சார்ந்த என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முழுநேர படிப்பாக படித்தவர் களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. ஓராண்டு பணி அனுபவம் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 31-8-2016-ந் தேதியில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வுகளுக்கு உட்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். www.iocrefrecruit.in என்ற இணையதள முகவரியில் முழுமையான விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-9-2016-ந் தேதியாகும்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.