உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி
* சிரியாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அலெப்போ நகர் அருகே நிவாரணப் பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர். உடனடியாக சிரியா ராணுவமும், ரஷியாவும் இணைந்து பதிலடி தந்ததில், 40 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர்.
* ஜப்பானில் 'மலாகாஸ்' புயல் தாக்கியது. இதன் காரணமாக அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 லட்சம் பேர் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் வன்முறை கோரத்தாண்டவமாடியது. போராட்டக்காரர்களும், போலீசாரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் 17 பேர் உயிரிழந்தனர்.
* பயங்கரவாத கும்பல்களை ஒழிப்பதில் பாகிஸ்தான் இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறினார்.
Comments