-->

Wednesday, September 28, 2016

பக்க வாதத்தை தீர்க்கும் வாத நாராயணன்

பக்க வாதத்தை தீர்க்கும் வாத நாராயணன்
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று நாம் பக்க வாதம் வராமல் தடுப்பதை குறித்து பார்க்கலாம். மூளையில் போதிய பிராணவாயு செல்லாமல் இருப்பது, ரத்தம் கட்டிக் கொள்வது போன்றவற்றால் இந்த பக்கவாதம் தோன்றுகிறது. இந்த பக்கவாதத்தை முறியடிப்பது குறித்து அன்றாடம் கிடைக்கும் பொருட்களை கொண்டு எளிய வகையில் மருந்தை தயார் செய்யலாம். வாதநாராயணன் எனப்படும் வாதமடக்கி இலை உடலில் ஏற்படும் வாதத்தை தடுப்பதில் மிக சிறப்பாக செயல்படுகிறது.பக்கவாதம் வருவதற்கு முன்னதாக உடலில் தேவையற்ற வாதம் ஏற்படாமல் தடுப்பதற்கான தைலம் ஒன்றை நாம் இப்போது தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் வாதநாராயணன் இலை பொடி. மூக்கிரட்டை வேர் பொடி, விளக்கெண்ணெய். விளக்கெண்ணையை ஒரு டீஸ்பூன் அளவு வாணலியில் எடுத்துக் கொள்ளவும். வாதநாராயணன் இலைப் பொடியை அரை டீஸ்பூன் சேர்க்கவும். மூக்கிரட்டை வேர்பொடியை கால் டீஸ்பூன் அளவு சேர்க்கவும். இதை நன்றாக கலக்கிக் கொண்டு சிறு தீயில் வைத்து நன்றாக காய்ச்சவும். இதை மாதம் ஒரு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் தேவையற்ற வாதம் ஏற்படுவதை தடுக்கிறது. இந்த மருந்தை புதிதாக முதன்முறையாக எடுக்கும் போது ஒன்று அல்லது இரண்டு முறை வயிற்றுபோக்கு ஏற்படலாம். இரவு தூங்குவதற்கு முன்பாக இதை ஒரு ஸ்பூன் குடித்து விட்டு படுத்தால் காலையில் வயிற்று போக்கு உண்டாகும். வாதம் செயல் இழப்பை தருவதைப் போலவே வாதம் அதிகமானால் அதிக துருதுருப்புடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்போது வியர்வை பிசுபிசுப்புடன் காணப்படும். இதை கொண்டு நாம் நமது உடலை வாத உடல் என்று கண்டு கொள்ளலாம். அதே போல் பக்க வாதம் ஏற்பட்டவர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீர் செய்வதற்கான மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் பூண்டு பற்கள் 5, மஞ்சள் பொடி, பால். இந்த பூண்டு பற்களை கால் டம்ளர் அளவு பாலில் வேக வைக்க வேண்டும். பூண்டு வெந்தவுடன் இதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்க்கவும்.  பின்னர் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடலாம். பூண்டு, சமையல் மஞ்சள், பாலில் இட்டு கொதிக்க வைத்து இரவில் குடிப்பதால் பக்க வாதம் வருமோ என்ற அச்சத்தில் இருந்து நாம் விடுபடலாம். பக்க வாதம் வராமல் தடுக்கலாம். பக்க வாதம், முகவாதம் வந்து தடுமாறும் நிலையிலும் கூட இந்த பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை கலந்து கொதிக்க வைத்த பாலை பருகி வருவதால் மிகுந்த பயனை நா ம் அடையலாம். இரவில் இந்த பூண்டு மஞ்சள் பாலை பருகுவதன் மூலம் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது போன்று அன்றாடம் நமது வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே மிகச் சிறந்த மருந்துகளை தயாரித்து சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.