சத்துணவுக்கான பயறு வகைகள் தரமானதாக வழங்க கோரிக்கை

சத்துணவுக்கான பயறு வகைகள் தரமானதாக வழங்க கோரிக்கை
'தரமான பயறு வகைகளை, வாணிபக் கழகம் சப்ளை செய்ய வேண்டும்' என, சத்துணவு மைய ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள், வேக வைத்த கருப்பு கொண்டை கடலை அல்லது பச்சை பயறு வழங்கப்படுகிறது. இதற்காக, ஏழு கோடி ரூபாய்க்கு, 700 டன் கருப்பு கொண்டை கடலை; மூன்று கோடி ரூபாய்க்கு, 400 டன் பச்சை பயறு வாங்க, வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது. அதை, தரமானதாக வாங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, சத்துணவு மைய ஊழியர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க, வேக வைத்த பயறு வகைகளை வழங்க வேண்டும்; இதற்காக, அரசு வழங்கும் பயறு வகைகளின் தரம் மோசமாக உள்ளது. வாணிபக் கழக அதிகாரிகளிடம், பலமுறை தெரிவித்தும், தீர்வு கிடைக்கவில்லை. இந்த முறையாவது, தரமான பயறு வாங்கி சப்ளை செய்ய, புதிதாக பொறுப்பேற்றுள்ள, வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் கோபால், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Comments