தமிழ் அறிஞர்

தமிழ் அறிஞர்


இத்தாலி நாட்டில் பிறந்த வீரமாமுனிவர் திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர். "கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி" என்பது இவரின் இயற்பெயர். இவர் தமது சமயத் திருப்பணியாற்ற தமிழகத்துக்கு வந்தார். தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றினார். பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை தூய தமிழில் மாற்றிக்கொண்டார். 23 நூல்களை தமிழில் இயற்றிய வீரமாமுனிவர், திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். இவர் எண்ணற்ற தமிழ் சுவடிகளை தேடி சேகரித்தால் "சுவடி சேகரித்த அறிஞர்" எனப்பெயர் பெற்றார். தமிழ் கற்க ஏதுவாக தமிழ் லத்தீன் அகராதியை உருவாக்கினார்.


Comments