-->

Wednesday, September 28, 2016

துளிகள்

துளிகள்
* இந்திய கிரிக்கெட் வாரியத்தில் செய்ய வேண்டிய நிர்வாக சீர்திருத்தம் குறித்து முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி அளித்த சிபாரிசுகளை அமல்படுத்தாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது. வருகிற 30-ந் தேதி மற்றும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் எல்லா சீர்திருத்தங்களையும் முழுமையாக அமல்படுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதற்கிடையில் லோதா கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் சமீபத்தில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தேர்வாளர்கள் நியமனம் உள்பட பல்வேறு விஷயங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளில் லோதா கமிட்டியின் சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் மீறி செயல்பட்டு இருக்கிறதா? என்பது குறித்த நிலையை சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக சமர்ப்பிக்க லோதா கமிட்டி முடிவு செய்துள்ளது.
* ரஷியாவில் நடந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 24-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் அமெரிக்க ஓபன் சாம்பியன் வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) எதிர்கொண்டார். 2 மணி 23 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 19 வயதான அலெக்சாண்டர் 6-2, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்காவை வீழ்த்தி முதல்முறையாக ஏ.டி.பி. ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
* இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கான்பூரில் நேற்று அளித்த பேட்டியில், 'காஷ்மீரில் உரி ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் மக்களுக்கு வேதனை அளிக்கும் செயலாகும். இதுபோன்ற அசம்பாவிதங்கள் அடிக்கடி நடந்தால் மோசமானதாகும். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.
* மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் பனிமலர் ஆதரவுடன் 14-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் ஐ.ஓ.பி. அணி 84-64 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பெண்கள் பிரிவில் மெட்ராஸ் நேஷனல் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பரிசளிப்பு விழாவில் மலேசிய தூதரக அதிகாரி புஜாரஜம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். விழாவில் இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், சூர்யா ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் ஸ்ரீகுமார், கிளப் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, எம்.எம்.டி.ஏ.கோபி, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.