உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி
* அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள போனிக்ஸ் நகரில் வான் சாகச வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற குட்டிவிமானம் ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இதில், விமானி, வான் சாகச வீரர்கள் 4 பேர் மற்றும் வீட்டில் இருந்த 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். இயக்கத்தினரின் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஐ.எஸ். இயக்கத்தினரின் ஆயுத கிடங்குகள் மற்றும் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
* அமெரிக்காவில் கடந்த 1965-ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை கண்ட திரைப்படம் 'தி சவுண்ட் ஆப் மியூசிக்'. இசையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சார்மியான் கார். அவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 73.
* துருக்கியில் பயங்கரவாத தடுப்பு படையினர் தலைநகர் இஸ்தான்புலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஐ.எஸ். இயக்கத்தினருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 40 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.
* தாய்லாந்து நாட்டில் சாவோ பிரேயா ஆற்றில் சுற்றுலா பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 11 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் போது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின் போது அவர்கள் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர்.


Comments