-->

Tuesday, September 27, 2016

‘புகை’... இப்படியும் ஒரு பிரச்சினை

'புகை'... இப்படியும் ஒரு பிரச்சினை
புகைபிடிக்கும் பழக்கம், உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும் என்று அறிவோம்.அதேநேரம், நாம் சாப்பிடும் உணவின் அளவையும், சக்தியையும் குறைக்கும் திறன் புகைப்பழக்கத்துக்கு இருக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.ஏதென்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட இப்புதிய ஆய்வின் முடிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்த கொன்ஸ்டான்டினா ஸக்காரி, புகைப் பழக்கமானது உண்ணப்படும் உணவின் சக்தி அளவைக் குறைக்கிறது என்று கூறுகிறார்.தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் புகைப்பழக்கத்துக்கு உட்பட்டிருப்பவர்கள் எடை சராசரியாக 10 கிலோ வரை குறைந்திருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு, உண்ணும் உணவின் அளவு குறைவதே காரணம் என தெரிவிக்கப்பட்டிருக் கிறது.எனினும் தீய விளைவுகளை ஏற் படுத்தும் புகைப்பழக்கத்தை, உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்த முடியாது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.