-->

Tuesday, September 13, 2016

காலாண்டு தேர்வு தேதி மாற்றம்.

காலாண்டு தேர்வு தேதி மாற்றம்.
தமிழகம் முழுவதும், கடந்த, 8ம் தேதி பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு துவங்கியது. இந்நிலையில், ஓணம் பண்டிகைக்காக, 14ம் தேதி, சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது;அதனால், காலாண்டு தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு, செப்., 12ல் நடக்கவிருந்த ஆங்கிலம் இரண்டாம் தாள், செப்., 20க்கும், 14ம் தேதி நடக்கவிருந்த வணிகவியல், மனை அறிவியல் மற்றும் புவியியல் தேர்வுகள், 22ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்புக்கு, செப்., 15ல் ஆங்கிலம் முதல் தாள்; 16ல் ஆங்கிலம் இரண்டாம் தாள்; 19ல் கணிதம்; 21ல் அறிவியல்; 22ல் விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடத் தேர்வுகள், வழக்கமான தேதிகளில் நடத்தப்படுகின்றன.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.