-->

Wednesday, September 28, 2016

கனவுகள்... புதிய விஷயங்கள்

கனவுகள்... புதிய விஷயங்கள்
நாம் அனைவரும் தூக்கத்தில் கனவுலகில் சஞ்சரிக்கிறோம். சரி, நாம் தினசரி உறக்கத்தில் எத்தனை கனவுகளைக் காண்கிறோம்?
உங்களின் பதில் எதுவாக இருந்தாலும், நாம் சராசரியாக அன்றாடம் நான்கு முதல் ஆறு கனவுகள் காண்கிறோம் என்பதுதான் உண்மை.
இந்தக் கனவுகள் ஐந்து நிமிடத்தில் இருந்து முப்பது நிமிடங்கள் வரை நீடிக்கின்றன.
ஆனால் நம்மில் பலரால் இதை ஒத்துக்கொள்ள முடியாது. இவ்வளவு நேரமா கனவு காண்கிறோம் என்று கேள்வி கேட்போம்.
நாம் காலையில் எழும்போது 95-ல் இருந்து 99 சதவீத கனவுகளை மறந்துவிடுவதுதான் காரணம். காணும் கனவுகள் சுவாரசியமற்றதாக அமையும்போது பெரும்பாலும் அவற்றை மறந்துவிடுகிறோம்.
சில நேரம் நாம் நமது கனவுகளில், முன்பின் தெரியாத நபர்களைக் காண்பதாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை.
நம் கனவுகளில் காணும் அனைவரையுமே ஏதாவது ஓர் சூழ்நிலையில் எங்கேயாவது நிச்சயம் பார்த்திருப்போம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நமது மூளை ஒருபோதும் புதிய முகத்தை நமக்கு உருவாக்கம் செய்யாது. மூளைதானே கனவுகளின் மூல கேந்திரம்?
சிலநேரங்களில், நாம் விரும்பும் கனவுகள் வருவதில்லை என்றும், நம்மால் கனவுகளை உருவாக்க முடியாது என்றும் நினைக்கிறோம்.
ஆனால் வருங்காலத்தில், நமது கனவுகளை நாம் விரும்பிய முறையில் வடிவமைக்கலாம். இதற்கு, 'லூசிட் டிரீமிங்' என்று பெயர்.
இந்த முறை கண்டுபிடிக்கப்பட்ட பின், நாம் அனைவரும் நமது கனவுகளுக்கு இயக்குநர் ஆகிவிடுவோம். அத்துடன், கனவுகளை எவ்வாறு வீடியோ பதிவு செய்வது என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
நாம் பொதுவாக வண்ணத்தில் கனவுகள் காண்பதாக தோன்றுகிறது. ஆனால் 12 சதவீதம் பேர், கறுப்பு-வெள்ளை நிறத்தில் கனவு காண்கிறார்கள்.
கனவுகளைப் பற்றி மக்கள் மத்தியில் பல்வேறு நம்பிக்கைகளும், கருத்துகளும் உலவுகின்றன. குறிப்பிட்ட கனவுகளைக் கண்டால் நன்மை என்றும், குறிப்பிட்ட கனவுகளைக் கண்டால் தீமை என்றும் பலர் கருதுகிறார்கள்.
ஆனால் அந்த நம்பிக்கைகளுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதே உண்மை.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.