உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
* லிபியாவில் கடந்த வாரம் முக்கிய எண்ணெய் துறைமுகங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு அந்த துறைமுகங்களை லிபியா படையினர் நேற்று மீட்டனர்.
* ஏமன் உள்நாட்டுப்போரில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு, ஓமன் நாட்டின் பதிவெண் பிளேட்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஆயுதங்கள் வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏமன் உள்நாட்டுப்போரில் நடுநிலை வகிக்கும் ஓமன் அதிகாரிகளுக்கும் இந்த ஆயுதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறப்படுகிறது.
* பாலஸ்தீனத்தில் மேற்குகரையில் அமைந்துள்ள எப்ராத் என்ற இடத்தில் இஸ்ரேல் படை அதிகாரி ஒருவரை பாலஸ்தீனியர் ஒருவர் நேற்று கத்தியால் குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர், இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
* மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிளர்ச்சியாளர்கள் ஒரு கிராமத்திற்குள் புகுந்து, 26 அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று விட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Comments