-->

Wednesday, September 14, 2016

கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு வாய்ப்பு

கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு வாய்ப்பு
இந்திய கடலோர காவல்படையில் 'உதவி கமாண்டன்ட்' வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான சிறப்பு வேலை வாய்ப்பாகும். பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
'இந்தியன் கோஸ்ட் கார்டு' எனப்படும் இந்திய கடலோர காவல்படை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆயுதப்படையின் ஒரு அங்கமான இது கடற்கரை மற்றும் கடலோர வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை கவனிக்கிறது. தற்போது இந்த படைப்பிரிவில் உதவி கமாண்டன்ட் பணிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை நியமிக்கும் சிறப்பு ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெனரல் டியூட்டி, ஜெனரல் டியூட்டி பைலட், தொழில்நுட்ப பிரிவு (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்), பைலட் (சி.பி.எல்.) போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 'கெசட்டடு அதிகாரி' தரத்திலான இந்த பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதிகளை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-7-1987 மற்றும் 30-6-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். படிப்பை இடைவெளியின்றி (10+2+3 முறையில்) படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.
டெக்னிக்கல் பிராஞ்ச் பிரிவு விண்ணப்பதாரர்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவு என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் 12-ம் வகுப்பில் இயற்பியல், கணித பாடங்களில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
12-ம் வகுப்பில் இயற்பியல் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்களுக்கு நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் வழியாக 15-9-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.