-->

Tuesday, September 27, 2016

வேற்றுகிரகவாசிகள் தேடலுக்கான உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி சீனாவில் செயல்படத் தொடங்கியது

வேற்றுகிரகவாசிகள் தேடலுக்கான உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி சீனாவில் செயல்படத் தொடங்கியது
வேற்றுகிரகவாசிகள் பற்றிய தேடுதலை முடுக்கிவிடவும், பிரபஞ்சத்தின் தோற்றத்தை புரிந்து கொள்ளவும் 30 கால்பந்தாட்ட மைதான அளவில் உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த தொலைநோக்கி நேற்று முதல் செயல்படத் தொடங்கியது. விண்வெளியில் இருந்து மர்மமான முறையில் பல ஒலிகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதை வேற்றுகிரகவாசிகள் அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன. அந்த ஒலிகளை மொழி மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து வேற்றுகிரகவாசிகள் குறித்த தேடலில் சீனவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நமது சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள நட்சத்திர தொகுதிகளில் ஒளிக்கு பின்னால் கிரகங்கள் இருக்கின் றனவா? அதில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த 2011-ல் உலகின் மிகப் பெரிய தொலை நோக்கியை உருவாக்கும் பணியை சீனா தொடங்கியது. குய்சோ மாகாணத்தில், பிங்டாங் பகுதி யில் உள்ள மலைசூழ்ந்த கர்ஸ்ட் பள்ளத் தாக்கு பகுதி இதற்காக தேர்வு செய்யப் பட்டது. மேலும் வானியல் அதிசயங்களை துல்லியமாக பதிவு செய்யும் வகையில் பள்ளத்தாக்கு அருகே 5 கி.மீ சுற்று வட்டாரத்தில் வசித்து வந்த 8,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து 30 கால்பந்தாட்ட மைதான அளவில் 4,450 பிரதிபலிப்பான் (ரிப்ளெக்டர்) பேனல்கள் பதித்த உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி உருவாக்கப்பட்டு நேற்று முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பூமிக்கு அப்பால் வாழும் வேற்றுகிரகவாசிகளின் குரலையும், பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும் என சீன விஞ் ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பில் உருவான இந்த தொலைநோக்கிக்கு 500 மீட்டர் அபர்ச்சர் ஸ்பெரிக்கல் டெலஸ்கோப் (பாஸ்ட்) என பெயரிடப்பட்டுள்ளது. 


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.