-->

Monday, September 26, 2016

எலுமிச்சை மின்சாரம் எடுப்போமா?

எலுமிச்சை மின்சாரம் எடுப்போமா?
எலுமிச்சை சாதம், எலுமிச்சை ஜூஸ்... என பழக்கப்பட்ட நமக்கு, எலுமிச்சை மின்சாரம் கொஞ்சம் புதுமைதான். அறிவியல் அதிசயங்களில் எலுமிச்சை மின்சாரமும் ஒன்றுதான். இதை படிப்பதுடன்... அறிவியல் கூடங்களில், ஆசிரியர்களின் துணையோடு செய்தும் பார்க்கலாம். 4 எலுமிச்சை பழம், 4 செம்பு காசு, 4 இரும்பு ஆணி, ஒரு எல்.ஈ.டி. பல்பு, ஆணியை பிடித்துக்கொள்ளும் 'கிளிப்' பிடிமானம் உள்ள வயர்கள்... இவை இருந்தால் மின்சாரம் இன்றியே உங்களுடைய எல்.ஈ.டி. பல்பு ஒளிரும்...!
எலுமிச்சை பழம் பெரியதாகவும், சாறு நிறைந்த பழமாகவும் இருந்தால் பல்பு பளிச்சென எரியும். எலுமிச்சை பழத்தில் செம்பு காசுகள் பாதி நுழைந்த நிலையில் வைக்க வேண்டும். அதற்கு நேர் எதிராக இரும்பு ஆணிகளையும் நுழைத்துக் கொள்ளுங்கள். 'கிளிப்' பிடிமானத்துடன் இருக்கும் வயர்களை எடுத்து முதல் பழத்தின் ஆணியில் அழுத்தி மாட்டி விட்டு, அதன் மறுமுனையை இரண்டாவது பழத்தின் நாணயத்தில் இணைக்க வேண்டும். அதாவது சங்கிலி தொடர் போல ஒரு பழத்தின் ஆணியில் இருந்து, மறுபழத்தின் செம்பு காசிற்கு வயர் இணைப்பை ஏற்படுத்த வேண்டும். இப்படி 4 பழத்தையும் இணைத்தால் மீதமாக இரு வயர் முனைகள் கிடைக்கும். அது தான் எல்.ஈ.டி. பல்பை ஒளிர வைக்கப்போகிறது. மீதமிருக்கும் முனைகளில் பாசிடிவ், நெகடிவ் மின்னோட்டங்களுக்கு ஏற்ப எல்.ஈ.டி. பல்பின் முனைகளை பொருத்தினால், பல்பு பளிச்சென்று எரியும். அப்படியில்லாமல், மினுமினுத்தபடி எரிந்தால், கூடுதலாக இன்னும் சில பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இதை ஆசிரியர் உதவியுடன் செய்து பார்ப்பதுடன், அவர்களிடம் பாசிடிவ், நெகடிவ் மின்னோட்டங்களையும், மின்சார உற்பத்தி, மின்சார கடத்தல் போன்ற அம்சங்களையும் விளக்கச் சொல்லி... அறிவியலை அலசிப் பாருங்கள்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.