-->

Tuesday, September 27, 2016

91 எம்பிபிஎஸ் இடங்களுக்கு இன்று சிறப்பு கலந்தாய்வு சென்னையில் நடக்கிறது

91 எம்பிபிஎஸ் இடங்களுக்கு இன்று சிறப்பு கலந்தாய்வு சென்னையில் நடக்கிறது
அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள 91 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்பு வதற்கான சிறப்பு கலந்தாய்வு சென்னையில் இன்று நடக்கிறது.  தமிழகத்தில் 20 அரசு மருத் துவக் கல்லூரிகளில் 2,650 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 397 இடங்கள் (15 சதவீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டன. அதேபோல தமிழக அரசு ஏற்று நடத்தும் கோவை, கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தலா 100 எம்பிபிஎஸ் இடங்களில் 30 இடங் களும் சென்னையில் உள்ள தமிழ் நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி யில் உள்ள 100 பிடிஎஸ் இடங்களில் 15 இடங்களும் ஒதுக்கப்பட்டன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இந்த இடங்கள், தேசிய தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்பட்டன. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 91 எம்பிபிஎஸ் இடங்கள், 3 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டன. இதைய டுத்து, 91 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான சிறப்புக் கலந் தாய்வு, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடக்கிறது.
28-ம் தேதி கலந்தாய்வு
அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் மாநில அரசுக்கு உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 64 எம்பிபிஎஸ் இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 440 பிடிஎஸ் இடங்களும் மீதமுள்ளன. மேலும் புதிதாக அனுமதி கிடைத் துள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கு 75 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள 3 பிடிஎஸ் இடங்களுக்கும் 28-ம் தேதி கலந்தாய்வு நடப்பதாக மருத் துவக் கல்வி இயக்கக (டிஎம்இ) மாணவர் சேர்க்கைக்குழு செயலர் ஜி.செல்வராஜன் தெரிவித்துள்ளார்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.