-->

Wednesday, September 28, 2016

மருத்துவ கலந்தாய்வில் 91 இடங்களை மாணவர்கள் தேர்ந்து எடுத்தனர் அடுத்த கலந்தாய்வு 28-ந் தேதி நடக்கிறது

மருத்துவ கலந்தாய்வில் 91 இடங்களை மாணவர்கள் தேர்ந்து எடுத்தனர் அடுத்த கலந்தாய்வு 28-ந் தேதி நடக்கிறது
அகில இந்திய ஒதுக்கீட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட 91 எம்.பி.பி.எஸ். இடங்களை மாணவர்கள் நேற்று நடந்த கலந்தாய்வில் தேர்ந்து எடுத்தனர். அடுத்த மருத்துவ கலந்தாய்வு 28-ந் தேதி நடக்கிறது.
91 இடங்களுக்கு கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள 21 அரசு மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 432 இடங்கள் கொடுக்கப்பட்டன. இந்த வருடம் மருத்துவ படிப்பில் சேருவதற்கான அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு (நீட்) நடந்தது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட இடங்கள் மற்றும் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 91 இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு சென்னை அரசு பல்நோக்கு உயர் மருத்துவமனையில் நேற்று நடந்தது.
பல் மருத்துவ மாணவர்கள்
மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் தலைமையில் இந்த கலந்தாய்வு நடந்தது. துணை இயக்குனர்கள் டாக்டர் குப்புலட்சுமி, டாக்டர் ஜெகன்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்தாய்வில் 91 மருத்துவ கல்விக்கான இடங்களையும் மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுத்தனர். அவர்களில் ஏற்கனவே அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 13 பேரும் அடங்குவர். அவர்கள் அதனை உதறிவிட்டு அரசு மருத்துவ கல்லூரியில் சேருகிறார்கள்.
28-ந்தேதி அடுத்த கலந்தாய்வு
28-ந்தேதி அடுத்த மருத்துவ கலந்தாய்வு நடக்கிறது. அதில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 139 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் 440 இடங்களும் உள்ளன.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.