-->

Wednesday, September 28, 2016

500-வது டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக முடித்த இந்தியா

500-வது டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக முடித்த இந்தியா
* இந்திய அணி தனது 500-வது டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக முடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறது. 1932-ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி தனது முதலாவது டெஸ்டில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. மைல்கல் போட்டிகளான 100-வது டெஸ்டிலும் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்தது. 200-வது டெஸ்டில் பாகிஸ்தானுடன் டிரா கண்டது. 300-வது டெஸ்டில் தெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை சாய்த்தது. 400-வது டெஸ்டில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. 500-வது டெஸ்டில் விராட்கோலி தலைமையில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்று வரலாறு படைத்துள்ளது.
* 500-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி பெற்ற 130-வது வெற்றி இதுவாகும். சொந்த மண்ணில் கண்ட 88-வது வெற்றியாகும். டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1 முதல் 100 வரை 10 ஆட்டங்களிலும், 101 முதல் 200 வரை 25 ஆட்டங்களிலும், 201 முதல் 300 வரை 21 ஆட்டங்களிலும், 301 முதல் 400 வரை 32 ஆட்டங்களிலும், 401 முதல் 500 வரை 42 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடி இருக்கிறது.
* இந்திய டெஸ்ட் அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 12 டெஸ்டுகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது. கடைசியாக 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொல்கத்தாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்ட இந்திய அணி அதன் பிறகு உள்ளூரில் நடந்த 12 டெஸ்ட் போட்டியில் 10-ல் வெற்றி கண்டுள்ளது. இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இதற்கு முன்பு இந்திய அணி உள்ளூரில் 20 டெஸ்டிலும் (1977-1980), 16 டெஸ்டிலும் (1960-64) தொடர்ந்து தோல்வியை சந்திக்காமல் இருந்துள்ளது.
* விராட்கோலி தலைமையில் 15-வது டெஸ்டில் ஆடிய இந்திய அணி 8-வது வெற்றியை ருசித்துள்ளது. 2 ஆட்டங்களில் தோல்வியும், 5 ஆட்டங்களில் டிராவும் கண்டுள்ளது.
*1988-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதில்லை. அந்த சோகம் இன்னும் தொடருகிறது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.