-->

Monday, September 26, 2016

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும் 500 கி.மீ., செல்லும் மின் பேருந்து

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும் 500 கி.மீ., செல்லும் மின் பேருந்து
கார்கள் மட்டுமல்ல, முழு நீள பேருந்துகளும் மின்சாரத்தில் ஓடும் காலம் வந்து விட்டது. ஏற்கனவே பெங்களூரில், 40 பேர் அமரும், சீனாவின், 'பைட்' மின்சார பேருந்தை, நகர போக்குவரத்துக்கு சோதனை ஓட்டம் பார்த்திருக்கின்றனர்.இப்போது அதற்கு போட்டியாக, 'புரோடெர்ரா' என்ற அமெரிக்க மின் பேருந்து நிறுவனம், 'கேட்டலிஸ்ட் இ2' என்ற பேருந்தை தயாரித்திருக்கிறது. எங்கள் பேருந்தை பயன்படுத்தினால், 40 கார்களை சாலையிலிருந்து அகற்றி நெரிசலை குறைப்பதோடு, பல மடங்கு சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும் என்று விளம்பரம் செய்கிறது புரோடெர்ரா.இதன் மின் சேமிப்புக் கலன்களை ஐந்து மணி நேரம் மின்னேற்றம் செய்தால் போதும். ஒரே மின்னேற்றத்தில், 500 கி.மீ., துாரம் செல்கிறது. ஆனால், சோதனை ஓட்டத்தில், 965 கி.மீ., பயணித்திருக்கிறது! நகர போக்குவரத்துக்கு, மின் பேருந்துகள் பொருத்தமானவை என்று போக்குவரத்து வல்லுனர்கள் கருதுகின்றனர். டவுன் பஸ் குறிப்பிட்ட தடம், குறிப்பிட்ட துாரம் மட்டுமே செல்பவை. எனவே, நடுவழியில் மின்சாரம் தீர்ந்தால் என்ன செய்வது என்ற சிக்கல் எழாது. புகை கக்காது என்பதும், வண்டியிலிருந்து இரைச்சல் இருக்காது என்பதும், நகர மாசுக் கட்டுப்பாட்டுக்கு மிகவும் உதவும். கேட்டலிஸ்ட் மின் பேருந்து, 12.5 டன் எடையும், 40 அடி நீளமும் கொண்டது. இதில் உள்ள இரட்டை மின் கலன்களில், 660 கி.வா., மின்சாரத்தை சேமிக்கலாம். வாகனத்தில் பிரேக் போடும்போதெல்லாம், சக்கர சுழற்சியால் கிடைக்கும் இயற்பியல் விசையில், 92 சதவீதம் மின்சாரமாக உருமாற்றம் செய்யப்பட்டு சேமிக்கப்படும் என்கிறது புரோடெரா. வண்டியின் விலை: 5.35 கோடி ரூபாய்! ஆனால், நீண்டகால அடிப்படையில், டீசல் பஸ்கள் தரும் எரிபொருள் செலவுகள், தேய்மானம் மற்றும் பழுதுகள் போன்றவை மின் பேருந்தில் மிக மிக குறைவு என்பதால் லாபகரமானது என்கிறது புரோடெர்ரா. தமிழகத்தில், மின் பேருந்து மயம் எப்போது?


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.