டெல்லி போலீசில் 4669 கான்ஸ்டபிள் பணிகள் பெண்களும் விண்ணப்பிக்கலாம்

டெல்லி போலீசில் 4669 கான்ஸ்டபிள் பணிகள் பெண்களும் விண்ணப்பிக்கலாம்
மத்திய போலீஸ் படையில் 4 ஆயிரத்து 669 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
ஸ்டாப் செலக்சன் கமிஷன், டெல்லி மத்திய போலீஸ் படையில் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. எக்சிகியூட்டிவ் தரத்திலான இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 4 ஆயிரத்து 669 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆண்களுக்கு 3 ஆயிரத்து 115 இடங்களும், பெண்களுக்கு 1,554 பணி யிடங்களும் உள்ளன.
இட ஒதுக்கீடு வாரியாக ஆண்கள் பிரிவு பணியிடங்களில் பொது பிரிவுக்கு 1, 557 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 847 இடங்களும், எஸ்.சி. பிரிவுக்கு 473 இடங்களும், எஸ்.டி. பிரிவுக்கு 238 இடங்களும் உள்ளன. பெண்கள் பணியிடங்களில் பொது பிரிவுக்கு 815 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 443 இடங்களும், எஸ்.சி. பிரிவுக்கு 250 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 46 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
ஆண் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 21 வயதுடையவர்களாகவும், பெண் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுடையவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். 1-7-2016-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.
கல்வித்தகுதி:
மேல்நிலைக் கல்வி (பிளஸ்-2) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் குற்றப் பின்னணி விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பார்ட் 1, பார்ட் 2 என இரு நிலைகளில் விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டும். பார்ட் 2 விண்ணப்பத்தில் பணம் செலுத்தி விவரம் நிரப்ப வேண்டும். புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை, பிற்கால உபயோகத்திற்காக கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-10-2016
கட்டணம் செலுத்த கடைசி நாள் : 13-10-2016
எழுத்து தேர்வு நடை பெறும் நாள் : 4-3-2017
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள பக்கம் : www.ssconline.nic.in


Comments