-->

Tuesday, September 27, 2016

ஜப்பானில் கல்வி உதவித்தொகையுடன் பட்டப்படிப்பு நவம்பர் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பானில் கல்வி உதவித்தொகையுடன் பட்டப்படிப்பு நவம்பர் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
ஜப்பானில் கல்வி உதவித்தொகையுடன் படிக்க இப்போதே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவம்பர் 30-ந்தேதி கடைசி நாள்.
கல்வி உதவித்தொகை
ஜப்பானில் ரிட்சுமெய்க்கன் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
தற்போது அந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் இருந்து மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகையுடன் பி.பி.ஏ., பி.எஸ்சி. சமூகவியல் ஆகிய பட்டப்படிப்புகளை படித்து வருகிறார்கள்.
கடந்த வருடம் இந்தியாவில் இருந்து 36 பேர்கள் படிக்க தேர்ந்து எடுக்கப்பட்டனர். ஒவ்வொரு மாணவருக்கும் படிப்பு செலவு 4 வருடத்திற்கும் சேர்த்து ரூ.32 லட்சம்.
100 சதவீதம்
படிக்க செல்லும் முன்பே மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிர்ணயிக்கப்படுகிறது. சில மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீதமும், சில மாணவர்களுக்கு அதிக பட்சமாக 100 சதவீதமும் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படுகிறது.
கடந்த வருடம் 36 மாணவர்களுக்கும் சேர்த்து ரூ.8 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த உதவித்தொகை 4 வருடங்களுக்கும் சேர்த்து ஆகும்.
ரிட்சுமெய்க்கன் ஆசிய பசுபிக் பல்கலைக்கழக இந்திய அதிகாரி விஷ்ணு கூறியதாவது:-
இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம். கடந்த வருடம் 94 சதவீத பேர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு
மாணவ-மாணவிகள் விண்ணப்பித்த உடன் எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதில் தேர்ந்து எடுக்கப்படும் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் அடுத்த வருடம் (2017) செப்டம்பர் மாதம் சேர விரும்புபவர்கள் இப்போதே www.apu.ac.jp என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
மேலும் தகவலுக்கு சென்னை அண்ணாநகர் 10-வது மெயின்ரோட்டில் உள்ள ரிட்சுமெய்க்கன் ஆசிய பசுபிக் பல்கலைக்கழக அலுவலகத்தை அணுகலாம். விண்ணப்பிக்க நவம்பர் 30-ந்தேதி கடைசி நாள். இந்த தகவலை விஷ்ணு தெரிவித்தார்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.