பழங்குடியின மாணவர்களுக்குரூ.21 கோடியில் புது திட்டங்கள்

பழங்குடியின மாணவர்களுக்குரூ.21 கோடியில் புது திட்டங்கள்
பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கான திட்டங்களுக்கு, தமிழக அரசு, 21.37 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:
சேலம் கருமந்துறையில் உள்ள பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளிக்கு, சொந்த விடுதி கட்டடம் கட்ட, 3.60 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்; மாணவர்கள் எண்ணிக்கை, 135லிருந்து, 200 ஆக உயர்த்தப்படும்
வேலுார் ஜவ்வாது மலையில் உள்ள புதுார் நாடு, அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், 200 மாணவியர் தங்கிப் படிக்க, 3.94 கோடி ரூபாய் செலவில் விடுதி கட்டப்படும்
துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ், 1,000 ஆதிதிராவிட விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்; மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய டிபாசிட் தொகை, 7.50 கோடி ரூபாய், 'தாட்கோ' வழியாக வழங்கப்படும்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசவெளி, அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிட தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, 3.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
பழங்குடியினர் நலத்துறையின், 306 உண்டு உறைவிட பள்ளிகள், 42 பழங்குடியினர் விடுதிகள், இரண்டு ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில், 'பயோ மெட்ரிக் திட்டம்' கொண்டு வர, 1.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுபழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில், 1.29 கோடி ரூபாய் செலவில், 25 இடங்களில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Comments