-->

Wednesday, September 28, 2016

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.29 முதல் தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ள ஏற்பாடு

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.29 முதல் தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ள ஏற்பாடு
பிளஸ் 2 துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை தாங்கள் தேர்வெழுதிய மையத்திலேயே செப்டம்பர் 29 முதல் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்த பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கடந்த ஜூலை 21 முதல் ஆன்லைனில் அவர்களே பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மார்ச் பருவத்தில் முதன்முறையாக தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதர தேர்வர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வெழுதிய பாடங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படும். அசல் மதிப்பெண் சான்றிதழை செப்டம்பர் 29-ம் தேதி காலை 10 மணி முதல் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்த பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கடந்த ஜூலை 21 முதல் ஆன்லைனில் அவர்களே பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மார்ச் பருவத்தில் முதன்முறையாக தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதர தேர்வர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வெழுதிய பாடங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படும். அசல் மதிப்பெண் சான்றிதழை செப்டம்பர் 29-ம் தேதி காலை 10 மணி முதல் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.